மணப்பெண்ணை கட்டிப்பிடித்த தோழனுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

மணப்பெண்ணை அவரது தோழன் ஒருவர் கட்டிப்பிடித்தமையினால் ஏற்பட்ட விபரீத சம்பவம் ஒன்று தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் கோபமடைந்த மணமகன், மனமகளின் தோழனை சரமாரியாக தாக்குவது போன்று ஒருவீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வரைலாகியுள்ளது.

நைஜீரியாவில் இந்த சம்பவம் இடம்பெற்று. மணக்கோலத்தில் நின்ற தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க மணப்பெண்ணின் தோழன் ஒருவர் மேடையில் ஏறிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மணப்பெண்ணை தன்னை மறந்த நிலையில், அவர் இறுக்கமாகக் கட்டிப்பிடித்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த மணமகன், அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

ஆனால் மணப்பெண் இதைக் கண்டு சிரித்தபடியே நின்றுள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இந்த வீடியோவிற்கு பலரும் பலவிதமான விமர்சனக்களை எழுப்பி வருகின்றனர்.