மணப்பெண் செய்த வேலை: அதிர்ச்சியில் மாப்பிள்ளை

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோயிலில் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் மறுத்ததால், திருமணம் நின்ற சம்பவம் இரு வீட்டாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று திருமணம் செய்வதற்காக சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோயிலுக்கு 21 பேர் பதிவு செய்திருந்தனர்.

உடப்பன் குளத்தை சேர்ந்த மணமகன் காளீஸ்வரன், தேனி மாவட்டம் சின்ன கூலாம்பட்டியை சேர்ந்த மணமகள் பாண்டியம்மாள் ஆகியோர் திருமணத்துக்காக வந்திருந்தனர்.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சுவாமி சன்னதி முன்பு சாமி ஆடுவது போன்று மணப்பெண் பாண்டியம்மாள் கீழே விழுந்தார்.

பிறகு திருமணம் செய்ய விருப்பமில்லை என்றும், தாம் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை எனவும் பாண்டியம்மாள் கூறியுள்ளார்.

இதனால் மணமகன் காளீஸ்வரன் உள்ளிட்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பாண்டியம்மாளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை.

இதனால் திருமணம் நின்றதை அடுத்து, இருவீட்டாரும் சோகத்துடன் கோயிலில் இருந்து வெளியேறிச் சென்றதாக தெரியவருகிறது.