மணமேடைக்கு சென்ற மணமகனுக்கு இறுதி நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி!

திருமண மேடையில் மாப்பிள்ளைக்கு பதிலாக வேறு நபரை மணப்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தின் லோனி ட்ரோனிகா நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், இளைஞருக்கும் நேற்று திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

தாலி கட்டுவதற்கு முன்னர் மாலைகள் மாற்றும் நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. அப்போது முழு குடிபோதையில் மணமகன் மேடைக்கு சென்றுள்ளார்.

போதை காரணமாக அவரால் சரியாக நிற்க கூட முடியவில்லை, இதை பார்த்த மணப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து குடிக்கு அடிமையானவரை திருமணம் செய்ய முடியாது என அனைவர் முன்னிலையில் மணமகள் கூறியுள்ளார்.

இந்த நிலையில் மணப்பெண்ணின் உறவினர் ஒருவர் தங்கள் வீட்டு இளைஞர் அவரை மணக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த மணப்பெண் அந்த இளைஞரை மணக்க ஒப்பு கொண்டார்.

இந்த நிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண நேரத்தில் மணமகனுக்கு பதிலாக வேறு நபரை மணப்பெண் திருமணம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.