மதுபானக் கூடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 12 பேரை பலியெடுத்த நபர்!

அமெரிக்கா – கலிபோர்னியா மாநிலத்தின் மதுபானக்கூடத்தில் சற்றுமுன்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்துளடளதாக அந்நாட்டுக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பொலிஸாரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. மேலும் 10 பேர் காயமடைந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

Borderline Bar and Grill மதுபானக் கூடத்தில், துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தபோது குறைந்தது 200 பேர் உள்ளே இருந்ததாகக் கூறப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் குறைந்தது 30 துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதாக நம்பப்படுகிறது. துப்பாக்கி சூட்டை நடத்திய நபரும் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இருப்பினும், அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. சம்பவம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.