மதுபான விலை உயர்வு: வீட்டிலேயே மதுபானம் தயாரிக்கும் மக்கள்

துருக்கி நாட்டில் மதுபானங்களின் விலை சடுதியாக அதிகரித்தமையைத் தொடர்ந்து வீடுகளிலேயே மக்கள் பீர் தயாரித்துக்கொள்வதாக தெரியவருகிறது.

துருக்கி அதிபர் ((Tayyip Erdogan)) தையிப் எர்டோகனுக்கு மதுபானங்கள் பிடிக்காது என கூறப்படுகிறது.

எனவே மதுபானங்கள் மீதான வரியை அவர் மிகவும் உயர்த்திவிட்டதால் தற்போது இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே பீர் தயாரிக்கத் ஆரம்பித்துவிட்டனர்.

சொந்தமாக தயாரித்து அருந்தும் பீரின் சுவை மிகவும் பிடித்துவிட்டதால் வர்த்தக ரீதியில் விற்கப்படும் மதுபானங்கள் மீது ஆர்வம் குறைந்துவிட்டதாகவும் பொதுமக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.