மது போதையில் இலங்கை கிரிக்கெட் வீரர் செய்த வேலை! அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

மது போதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னேவை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே சமீபத்தில் தென்னாப் பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் இவரது அதிரடியால் இலங்கை அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்தது.

இந்நிலையில் இவர் இன்று அதிகாலை 5.15 மணியளவில் கொழும்பு, கின்சி சாலையில் காரில் சென்றுள்ளார்.

வெரல்லா பகுதியில் வந்துகொண்டிருந்த போது, திடீர் என எதிரில் வந்த ஆட்டோ மீது மோதினார்.

இந்த விபத்தில் 30 வயதுடைய ஆட்டோ ஓட்டுனர் படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் சிகிச்சைகாக மருத்து வமனையில் அனுமதித்துள்ளனர்.

இதைதொடர்ந்து, கருணாரத்னேவிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டதில்;

அவர் குடி போதையில் இருந்தது தெரிய வந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜராவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.