மனிதனின் முக அமைப்பில் அறிமுகமாகும் 3டி மாஸ்க்குகள்

மனித முக வடிவமைப்பு சற்றும் மாறாத வகையில் ஜப்பானைச் சேர்ந்த ரியல்-எப் என்ற நிறுவனம் 3டி மாஸ்க்குகளை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயற்கை மாஸ்க்குகள் குறித்து ரியல்-எப் நிறுவனத்தின் உரிமையாளர் ஒசாமு கிட்டகாவா தெரிவித்துள்ளமையானது;

இதுவரை செயற்கை முகவடிவ மாஸ்க்குகள் 2டியில் மட்டுமே உள்ளன. இதற்கு போதிய தொழில்நுட்பம் இல்லாததே காரணம் ஆகும்.

செயற்கை மாஸ்க்குகள் வடிவமைப்பில் 3டி மிகவும் சவாலான ஒன்றாகும். இந்த 3டி மாஸ்க்குகள் விளம்பரதிற்கும், மார்க்கெட்டிங் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த மாஸ்க்குகள் முகஅமைப்பு மறுபயன்பாட்டு தொழில்நுட்பத்தின் சமீபத்திய தயாரிப்பாகும்.

இதேபோல் கார் தயாரிப்பாளர்களும் 3டி மாஸ்க்குகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்த 3டி மாஸ்க்குகளை மென்பொருளுடன் இணைப்பதன் மூலம் ஓட்டுனர் உறங்கிக் கொண்டிருக்கிறாரா என்பது துல்லியமாக தெரிகிறது.

இந்த மாஸ்க்குகள் சில வாரங்களிலேயே உருவாக்கப்படுகின்றன. முதலில் முகம் 3டி ஸ்கேனில் பதிவிடப்படுகிறது. பின்னர் புகைப்படம் எடுக்கப்பட்டு, இவை இரண்டையும் கம்ப்யூட்டரில் மென்பொருள் மூலம் இணைத்து இந்த மாஸ்க்குகளுக்கான வடிவம் இறுதி செய்யப்படும் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் இதுபோன்ற மாஸ்க்குகள் மருத்துவத்துறையிலும், மனித உருவில் உருவாகும் ரோபோக்களுக்கு பொருத்தவும் பயன்படுகின்றன எனக் கூறினார்.