மனுஸ் அகதிகளுக்கு தங்குமிடங்கள் ரெடி (படங்கள்)

மனுஸ் தடுப்பு முகாமிலிருந்து வெளியேற மறுத்து புகலிடக்கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சகல வசதிகளுடனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 தங்குமிடங்களுக்குச் செல்ல வேண்டுமென, பப்புவா நியூகினி அரசு தொடர்ச்சியாக அறிவித்து வருகிறது.

2 இடைக்கால தங்குமிடங்களில் கட்டுமானப் பணிகளுக்கான இயந்திரங்கள் இன்னமும் இருப்பதாகவும் drone மூலம் எடுக்கப்பட்ட காணொளியில் பார்க்க கூடியதாக இருப்பதாகவும் தெரியவருகிறது.

எனினும் குறித்த தங்குமிடங்கள் தயார் நிலையிலேயே உள்ளதாகவும், சுற்றுவேலி அமைக்கும் பணிகள் மாத்திரம் இன்னமும் நிறைவடையவில்லை எனவும் மனுஸ் காவல்துறை அதிகாரி David Yapu தெரிவித்துள்ளார்.