மனைவிக்கு கணவன் செய்த காரியம்! புத்தாண்டு தினத்தில் இலங்கை நடந்த கொடூரம்

மனைவியின் இரண்டு கால்களை வெட்டி கணவனை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு தினத்தில் பதுளை ஹாலி -எல உடுகோஹோவில பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முழங்காலுக்கு கீழே கடுமையான வெட்டுக்காயங்களுடன் அந்த பெண் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

24 வயதான ஒரு பிள்ளையின் தாயான பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஹாலி- எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண், கணவனை பிரிந்து தனித்து வாழ்ந்து வருகின்றார்.

புத்தாண்டு தினத்தன்று பெண் தனது தாய் வீட்டுக்கு செல்லும் வழியில் காட்டில் மறைந்திருந்த சந்தேக நபர் இ்நத குற்றத்தை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இராணுவ வீரரான சந்தேக நபரை கைது செய்வதற்காக பதுளை பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் ஆலோசனையின் பேரில் ஹாலி- எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த சந்திரசேகரவின் தலைமையிலான குழுவினர் தேடுதலை நடத்தி வருகின்றனர்.