மனைவியின் அந்தரங்கப் புகைப்படங்களை கணவர் அவரது சகோதரருக்கு பேஸ்புக்கில் பகிர்ந்த கொடுமை!!

மனைவியின் அந்தரங்க புகைப்படங்களைக் கணவன் வெளியிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் அபுதாபியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணவனின் செல்போனை மனைவி எதேர்ச்சையாக எடுத்துப் பார்த்த போது தனது அந்தரங்க புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அந்தரங்கப் புகைப்படங்களைப் பார்த்து பேரதிர்ச்சியில் உறைந்த மனைவிக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. தனது அந்தரங்க புகைப்படங்களை கணவர் அவரது சகோதரருக்கு பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

இதனால் கடும் மன வேதனையடைந்த அந்த பெண் தன் கணவன் மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் கணவன் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.