மனைவியை மண்வெட்டியால் வெட்டி சிதைத்த கணவர்! இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வெலிகம – வல்லிவல பகுதியில் தனது மனைவியை மண்வெட்டியால் தாக்கிய கணவர் குறித்த செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பெண் காலி கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வீட்டுக்கு பின்னால் இருந்த மண்வெட்டியால் மனைவியை கணவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர், அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்