மருத்துவமனையில் இருக்கும் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்: நடிகர் மீது நடிகை பாலியல் புகார்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை விஜயலட்சுமி, நடிகர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பண உதவி செய்ய வேண்டும் என்று கன்னட சினிமா துறையினரிடம் அவரது சகோதரி உஷா கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து கன்னட நடிகர்கள் சிலர் உதவி செய்தனர். மருத்துவமனையில் சென்று விஜயலட்சுமியை பார்த்து நலம் விசாரித்த நடிகர் ரவி, ரூ. 1 லட்சம் பணஉதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பின்பு உதவிசெய்துவிட்டு, விஜயலட்சுமிக்கு தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயலட்சுமி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை நடிகர் ரவி மறுத்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் நான் உதவி செய்தேன்.

அவருக்கு உதவி செய்தது தவறு என இப்போது தெரிந்துகொண்டேன் என்று கூறியுள்ளார்.