மறதியை தடுக்க புதுவித ஆய்வு.. படியுங்க

குளோனிங் முறையில் மரபணு திருத்தப்பட்ட 5 குரங்குகளை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

‘அல்‌ஷமீர்’ எனப்படும் மறதி நோய் உள்ளிட்ட பல நோய்கள் மரபணு வழியாக சந்ததிகளுக்கு பரவுகின்றன.

எனவே இந்த நோயை தடுக்க விஞ்ஞானிகள் புதுவித முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். தாயின் வயிற்றில் வளர்ந்த இரட்டைக் குழந்தைகளின் நோயை மரபணுவிலேயே நீக்கி சீன விஞ்ஞானி சாதனை படைத்தார்.

இருப்பினும் அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. அனுமதி பெறாமல் இந்த பரிசோதனை மேற்கொண்டதாக விஞ்ஞான உலகம் குற்றம் சுமத்தியிருந்தது.

இந்த நிலையில் மரபணு கோளாறு நீக்கப்பட்ட 5 குரங்குகளை ‘குளோனிங்’ முறையில் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இவை மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனை, மன அழுத்தம் மற்றும் ‘அல்‌ஷமீர்’ எனப்படும் மறதி நோய் உள்ளிட்ட நோய்களை தடுப்பதற்குரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரியவந்துள்ளது.