மலாவியில் வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்புடன் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

தெற்கு மலாவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதோடு சூறாவளி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மலாவியில் தொடரும் அசாதாரண நிலைமையினால் 23 ஆகவிருந்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. சூறாவளி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு மலாவியில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளால் நேற்று (புதன்கிழமை) விடுக்கப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்பு ஏற்பட்ட புயலினால் மலாவி தெற்கு பகுதியில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்ததில் வெள்ளம் ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தில் சிக்கி 56 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 83000 க்கும் மேற்பட்டோர் தமது வாழ்விடங்களை இழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.