மார்ச் 12: சைமன் நியூகோம்பு, கனேடிய-அமெரிக்க வானியலாளர் பிறந்த தினம்!

சைமன் நியூகோம்பு (Simon Newcomb) மார்ச்சு 12 1835 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஜூலை 11, 1909 ஆம் ஆண்டு மறைந்த இவர் ஒரு கனடிய அமெரிக்க வானியலாளரும் பயன்முறைக் கணிதவியலாளரும் தற்கல்வியாளரும் பலதுறை வல்லுனரும் ஆவார்.

இவர் அமெரிக்க நாவாய்த் துறையிலும் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக இருந்தார்.

இவர் முறையான கல்வி பெறாவிட்டாலும், நேரவைப்புக்கும் பயன்முறைக் கணிதவியலின் பொருளியல்,

புள்ளியியல் போன்ற புலங்களுக்கும் அரிய பங்களிப்புகள் ஆற்றியுள்ளார். இவர் ஓர் அறிபுனை புதினமும் இயற்றியுள்ளார்.