மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் காணாமல் போனவர்களுடையதா? ஆயரின் அதிர்ச்சித் தகவல்

மன்னார் சதொச கட்டட வளாகத்தில் மீட்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன கதி நேர்ந்திருக்கும் என்பதை உணர்த்துகிறது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

வருடந்தோறும் தேசிய ரீதியில் நடைபெறும் இயேசு பிரானின் பிறப்பும், நத்தார் கொண்டாட்டமும் மன்னாரில் நேற்று நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அப்போது அவர் மேலும் கூறுகையில்;

கடந்த மூன்று வாரங்களாக மிகவும் கொந்தளிப்பாக இருந்த இலங்கை அரசியல் நிலமை தற்பொழுது படிப்படியாக வழமைக்குத் திரும்புவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் இன்னும் அவர்கள் விடுதலை ஆகாமலே சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் முடிவிற்று தொடர்ந்து கொண்டிருக்கின்றன என அவர் தெரிவித்தார்.