மீண்டும் ஏஞ்சலோ மெத்தியூஸ்…??

இலங்கை அணித்தலைவராக மீண்டும் ஏஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள, பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுடன் இடம்பெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்கிறது.

இந்தநிலையில் ஏஞ்சலோ மெத்தியூஸ் அணித்தலைவராக பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி, தேர்வுக் குழுவினரை இன்று மெத்தியூஸ் சந்திக்கவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து ஊடக சந்திப்பையும் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.