மீண்டும் கொழும்பின் பிரதான பகுதியில் பரபரப்பு! வெடித்து சிதறிய மோட்டார் சைக்கிள்

கொழும்பில் மீண்டும் மர்மான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு – ஐந்துலாம்பு சந்திக்கு அருகில் இந்த இந்த மோட்டார் சைக்கிள் நிற்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிளில் வெடிபொருட்கள் இருந்த நிலையில், பொலிஸாரினால் அது வெடிக்கச் செய்யப்பட்ட நிலையில், இதனால் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வான் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் குண்டுகள் பொருத்தப்பட்ட நிலையில் பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்திற்கமான முறையில் எந்தவொரு வாகனத்தை கண்டாலும் மக்கள் அச்சம் கொள்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Update – இந்த நிலையில் தற்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவித பொருட்களும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.