மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?

மீல் மேக்கர் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் – 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1/2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
பால் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (சிறியது)
தக்காளி – 2 (சிறியது)

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

கொத்தமல்லி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு, மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு சில நிமிடங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் மீல் மேக்கரை எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு தாளித்த பின்பு தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

பின்பு அந்தக் கலவையை மிக்ஸியில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள எஞ்சிய பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

அதில் மீல் மேக்கரை சேர்த்து, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கி விடுங்கள்.

பின்பு கிரேவியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொத்தமல்லியைத் தூவினால், மீல் மேக்கர் கிரேவி தற்போது தயார்.