முகம் சின்னதாக இருக்க வேண்டும் என்பதற்காக விபரீத முயற்சியில் இறங்கிய மாடல் அழகி!

தான் அழகாக காட்சியளிக்க வேண்டும் என நினைத்து புதியதொரு முயற்சியை கையாண்டு தனது முகத்தின் அளவை குறைக்க தாய்வானை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் முயன்றுள்ளார்.

உடல் உருவத்தையே மாற்றியமைக்கும் பிளாஸ்டிக் சர்ஜிரி முறைகள் தற்போது பிரபலமாகி வரும் நிலையில், இதற்கு மாற்று சிகிச்சையாய் அக்குப்பஞ்சர் முறையில் தனது முகத்தின் அளவை குறைத்துள்ளார்.

தாய்வான் நாட்டை சேர்ந்த BearGenie என்று அழைக்கப்படும் Belle Zhuo தான் இந்த விபரீத முயற்சியை மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த புதன் அன்று தன் முகம் முழுவதும் ஊசியால் குத்தி சிகிச்சை பெறும் புகைப்படத்தினை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

இந்த புகைப்படமானது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவை பார்த்த சில ரசிகர்கள்., BearGenie-னை தற்போது பார்க்க மிகவும் கொடூரமாக உள்ளீர்கள் என்றும்,

வேறு சிலர் BearGenie ஏற்கனவே அழகாக தான் இருந்தார், தற்போது ஏன் இந்த விபரீத முயற்சியை மேற்கொண்டு வருகின்றார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

bone-toning மசாஜினை தொடர்ந்து முகத்திற்கு அக்குப்பஞ்சர் செய்யும் வழக்கம் தற்போது தாய்வானில் ட்ரண்ட் ஆகி வருகின்றது.

இதில் bone-toning என்பது மிகவும் வலி ஏற்படுத்தக்கூடியது. இந்த இரு முறைமைகளை BearGenie பரீட்சித்து வருவது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கி, கடந்த பெப்ரவரி மாதம் வரை BearGenie இந்த சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.

சமீபத்தில் வெளியான FHM-ன் Top 100 Sexiest Woman in Taiwan என்னும் பட்டியலில் முதல் இடம் பிடித்த பெண் சிறிய முகம் கொண்டிருந்தார் எனவும், தானும் இந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்ற என்னத்தில் தனது முகத்தை சிறிதாக்க BearGenie, அக்குப்பஞ்சர் உதவியை நாடியதாகவும் கூறப்படுகிறது.