முடங்கியது வாட்ஸ்அப் செயலி!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வாட்ஸ்அப் செயலி சுமார் ஒருமணி நேரமாக உலகமெங்கும் இயங்காததால் தகவல் பறிமாற முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

முக்கிய தகவல் தொடர்பு செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் உலகம் முழுவதும் அதிகமானோர் பயன்படுத்தும் செயலியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மணி நேரமாக வாட்ஸ்அப் செயலி சரியாக இயங்கவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தொழில்நுட்ப அறிஞர்கள் தெரிவித்தனர்.

கூகுள் பிளே ஸ்டோரில் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுக்க 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் நிலையில், சில மணிநேர இடையூறால் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதனையடுத்து, கோளாறுகள் சரிசெய்யப்பட்டு வாட்ஸ்அப் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.