முட்டைகோஸ் வாங்க சென்ற பெண்ணுக்கு அடித்த அதிஷ்டம்!

முட்டைகோஸ் வாங்க சென்ற பெண்ணிற்கு கிடைத்த பாரிய அதிஷ்டம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணுக்கு 1½ கோடி ரூபாய் பரிசு கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த வனேசா வார்ட் என்ற பெண் முட்டைகோஸ் வாங்க தனது தந்தையுடன் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை அந்த பெண் கொள்வனவு செய்துள்ளார்.

முட்டைகோஸில் ஒரு கூப்பன் இருந்தது. அந்த கூப்பனை வைத்து அந்த பெண் ஒரு வீல் கேமை விளையாடியுள்ளார்.

விளையாட்டின் முடிவில் அந்த பெண் 1½ கோடிக்கு ரூபாய்க்கு அதிபதியாகியுள்ளார்.

இந்த ஆச்சரியத்தை நம்ப முடியவில்லை என அந்த பெண் தெரிவித்தார்.

இந்த பணத்தை வைத்து டிஸ்னி லேண்ட் செல்லவிருப்பதாக அந்த பெண் கூறினார்.