முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி! மருத்துவர்கள் மகிழ்ச்சி

ஹேமில்டனில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டாக்டர். அந்தோணி அடலி மற்றும் தலைமை எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆகியோரின் தலைமையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் எதிர்காலத்தில் பல நோயாளர்கள் பயன்பெறுவர் எனவும், இத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.