முதல்வரிடம் கேள்விக் கணைகளைத் தொடுக்கும் விஜயகாந்த்!-

படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க என்ன செயல்திட்டம் உள்ளது என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

இன்றைய அரசு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைத் தரக்கூடிய எந்த திட்டத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் இலவச திட்டங்களுக்காக செலவிடுகின்ற இந்த அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகின்ற எந்தவிதமான திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

இதனால் பல ஆண்டுகளாக வேலைகிடைக்குமென்று எதிர்பார்ப்போடு இருக்கின்ற பல இளைஞர்கள், வன்முறையாளர்களாகவும், சமூக விரோதிகளாகவும் மாறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.