முன்னணி இயக்குனருடன் சாய் பல்லவிக்கு திருமணமா? வெளியான அதிர்ச்சித் தகவல்!

சாய் பல்லவி ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து விட்டார்.

இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

சாய் பல்லவி தமிழில் கரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் அப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் சாய் பல்லவி நடிக்கும் போது விஜய்யுடன் காதலில் விழுந்ததாகவும், இவர்களுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது.

இதுக்குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் விஜய்யை தொடர்பு கொண்டு பேசுகையில்

அவர் பதறி போய், சார் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, அது எல்லாம் வந்ததி தான், நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.