முன்னேறிய இந்திய அணி! முதலிடத்தை விட்டுக்கொடுக்காத விராட் கோஹ்லி

இந்திய அணி ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அவுஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வென்றதன் பின்னர் இந்திய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 2-1 எனவும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 4-1 எனவும் கைப்பற்றியது.

இதனால் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 122 புள்ளிகள் பெற்று 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில உள்ளது. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தலா 111 புள்ளிகள் பெற்று முறையே 3 மற்றும் 4வது இடத்தைப் பிடித்துள்ளன.

பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன 6-வது இடத்தில் உள்ளது.

பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோஹ்லி 887 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

ரோகித் சர்மா 854 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா 808 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

டிரென்ட் போல்ட் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். குல்தீப் யாதவ் 4வது இடத்திற்கு பின்தங்கினார்.