முரளிதரனின் அரசியல் பேச்சு! பாராட்டும் கோத்தபாய

இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சமீபத்தில் வெளியிட்ட கருத்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவரிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச தனது டுவிட்டர் செய்தியில் இந்த பாராட்டினை தெரிவித்துள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில்,

“நாட்டின் அனைத்து அரசியல்தலைவர்களும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபடவேண்டும். அவ்வாறான நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் விதத்தில் முரளிதரனின் கருத்து அமைந்துள்ளது…” என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

முரளீதரன் நீங்கள் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வு அவசியம் என தெரிவித்து வருகின்றர் எனினும் அவ்வாறான தீர்வொன்று தேவையா என முரளிதரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

நாட்டின் பெரும்பான்மை மக்கள் அரசியல்வாதிகளிடம் கேட்பது ஜனநாயகத்தையோ அல்லது உரிமைகளையோ இல்லை. மூன்று வேளை உணவு உண்பதற்கும் தமது பிள்ளைகளிற்கு சிறந்த கல்வியை பெற்றுத்தருவதற்குமான பொருளாதார அபிவிருத்தியையுமே கேட்கின்றனர் என முத்தையா முரளிதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.