முறிந்து விழுந்த மரம்! குழந்தைகளைக் காப்பாற்றி ஹீரோவாக மாறிய தந்தை!

அவுஸ்திரேலியாவில் மரம் முறிந்து மகன் மற்றும் குழந்தைகள் மீது விழுந்திட இருந்தமையை தந்தை ஒருவர் டைவ் அடித்துச் சென்று, மரத்தை தன் முதுகில் சுமந்து அனைவரையும் காப்பாற்றி ஹீரோவாக மாறியுள்ளார்.

இருப்பினும் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இச்சம்பவம் அடிலெய்டு நகரின் டஸ்மோர் பூங்காவில் நடைபெற்றுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அனைவரும் மூழ்கியிருக்க, திடீரென மரம் இரண்டாக முறிந்து விழுந்தது.

அப்போது மரம் தரையில் விழும் இடத்தில் குழந்தைகள் நின்றிருந்தனர்.

மரம் முறியும் சப்தம் கேட்ட உடன் உஷாரான மிக்கல் மாவிட் (Miguel Mawete) என்பவர் கண்ணிமைக்கும் நேரத்தில்

குழந்தைகள் இருக்கும் பகுதிக்குச் சென்று வேகமாக முறிந்து விழுந்த மரத்தை தனது முதுகில் தாங்கியுள்ளார்.

தனது மகன் உள்ளிட்ட குழந்தைகளை மிக்கல் காப்பாற்றினாலும், பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.