முல்லைத்தீவில் பலத்த காற்று! பல வீடுகளுக்கு ஏற்பட்ட நிலை

முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.

இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது.

அத்துடன் பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் வாழை, பப்பாசி போன்ற மரங்களும் முறிவடைந்துள்ளன.

இதன்போது, வீட்டின் கூரைகள் வீசப்பட்டதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, குறித்த பகுதியில் மின்னல் தாக்கத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.