மூதாட்டியை மிரட்டி 10 பவுண் செயினை பறித்த விஷமி!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 10 பவுண் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இனந்தெரியாத மர்ம நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் திருப்பூரில் அரங்கேறியுள்ளது.

கருவம்பாளையம் ABT சாலையில் அருக்காணியம்மாள் என்ற மூதாட்டியிடமே குறித்த கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகன், மருமகள், வேலைக்காரப் பெண் அனைவரும் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவன் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.

அவர் அணிந்திருந்த 10 பவுண் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது.

தகவலறிந்து வந்த பொலிசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து வருகின்றனர்.

திருடன் விரைவில் சிக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.