மூன்றாவது சுற்றுக்கு முன்னெறினார் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்

சங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்று போட்டியொன்றில், ஜேர்மனியின் முன்னணி வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஜேர்மனியின் முன்னணி வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், ஜோர்ஜியாவின் நிகோலொஸ் பஸிலாஷ்விலியை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் செட்டை 7-5 என ஸ்வெரவ், போராடி கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில், பஸிலாஷ்விலி, ஸ்வெரவ்வுக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , ஸ்வெரவ் 2வது செட்டையும் 6-4 என கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.