மெத்தைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம்: தீவிர விசாரணையில் பொலிசார்

ஸ்பெயின் நாட்டின் மார்பெல்லா பகுதியில் உள்ள வீட்டில் தன்னுடைய தாய், பாட்டியின் சடலத்தை வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக 15 வயது சிறுமி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது, உடல் பதப்படுத்தப்பட்டிருந்தமை தெரியவந்தது.

பிரித்தானியாவை சேர்ந்த Valerie Butroid (71) என்பதும், அவர் கடந்த ஆண்டு மார்ச் 12ம் திகதி இறந்ததும் தெரியவந்தது.

ஆனால் அவரை எதற்காக பதப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில் அவருடைய உடலை மெத்தைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த, அவருடைய மகள் லூயிஸிடம் பொலிசார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில்,

சில வருடங்களுக்கு முன்பு லூயிஸ் கணவர் இறந்துவிட்டார். அன்று முதலே அவர் அதிகம் தனிமையை தேடினார். அடிக்கடி இந்த பகுதியில் துர்நாற்றம் வீசும்.

நாய்களும், பூனைகளும் சுற்றித்திரிவதால் அந்த நாற்றமாக இருக்கலாம் என நாங்களும் நினைத்துக்கொண்டோம் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் உடலை ஆய்வு செய்த பொலிசார், கொலை செய்யப்பட்டதற்கான எந்த தடயமும் உடலில் இல்லாததால், இயற்கையாக இறந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.