மெய்சூ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்தியாவில் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை மெய்சூ அறிமுகம் செய்தது.

மெய்சூ 16த் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, 91.18% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.

மெய்சூ 16த் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 99.12% துல்லியமாக இயங்கும் என்பதால், ஸ்மார்ட்போன் 0.25 நொடிகளில் அன்லாக் ஆகிவிடும்.

3D கிளாஸ் பேக் மற்றும் செராமிக் டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கும் மெய்சூ 16த் ஸ்மார்ட்போன் 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 24வாட் எம் சார்ஜ் ஃபிளாஷ் சார்ஜ் வசதி கொண்டுள்ளது.

இதனால் ஸ்மார்ட்போன் 0-67% வரை சார்ஜ் ஆக வெறும் 30 நிமிடங்களே ஆகும்.

மெய்சூ 16த் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் மூன்லைட் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் மெய்சூ 16த் ஸ்மார்ட்போன் விலை ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.