மெர்சலைத் தொடர்ந்து அடுத்த கூட்டணி யாருடன்..? வெளியான அறிவிப்பு!!

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சுமார் ரூ 200 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மெர்சலை தொடர்ந்து தேனாண்டாள் நிறுவனம் அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்தநிலையில் அடுத்து தனுஷுடன் கூட்டணி அமைக்கவுள்ளோம் என்று தேனாண்டாள் உரிமையாளர் ஹேமாவே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.