மெல்பர்ன் நெடுஞ்சாலையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 92 வயதான முதியவர்!

மெல்பர்னின் Monash நெடுஞ்சாலையில் Mobility ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற 92 வயோதிபர் முதியவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

அவர் பொலிஸாரால் இடைநிறுத்தப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய இவ்வீதியில் குறித்த முதியவர் சென்றுகொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டி ஒருவர் அம்முதியவரை பாதுகாப்பதற்காக Hazard விளக்கினை ஒளிர்ந்தபடி அவரைப் பின்தொடர்ந்தார்.

அதேநேரம் பொலிஸாருக்கும் அறியத்தந்திருந்தார். இதையடுத்து உடனடியாக குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் முதியவரை இடைநிறுத்தி பாதுகாப்பாக மீட்டனர்.

தனது காரில் முதியவரைப் பின்தொடர்ந்த Bruce என்ற நபரின் எச்சரிக்கைகளை அம்முதியவர் காதில்வாங்காமல் குறித்த நபரை கெட்டவார்த்தையால் திட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருந்த போதிலும் Bruce பொலிஸார் வரும்வரை முதியவருக்குப் பாதுகாப்பு வழங்கியிருந்தார். இதேவேளை Glen Waverly பகுதியைச் சேர்ந்த இந்த முதியவரைக் காணவில்லை என்று அன்றையதினம் பொலிஸில் முறையிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.