மைத்திரிக்கு பாதிப்பில்லை எனில் என்னையும் பாதிக்காது – மகிந்த

19 வது திருத்தச் சட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தை பாதிக்காது எனில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தனக்கும் தடையிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“2015 ஜனாதிபதி தேர்தலை 19 வது திருத்தச்சட்டம் பாதிக்காது என்றால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நானும் போட்டியிடலாம்.

அதற்கு எவ்வித தடையும் இருக்காது என்று கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன 6 ஆண்டுகள் பதவி வகிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்குமானால், நான் போட்டியிடலாம்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் கூட அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.