மைனஸ் 20 டிகிரி செல்சியஸில் ஓட்டப் பந்தையம்!!

அயர்லாந்து ஓட்டப்பந்தய வீரர் பால் ராபின்சன் அண்டார்டிகாவில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இவர் நியூயார்கில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு மைல் தூரத்தை 3 நிமிடம் 51 வினாடிகளில் கடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அன்டார்டிகாவில் பால் ராபின்சன் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடம் 17 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இதுவரை அண்டார்டிகாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு மைல் ஓட்டப்பந்தயங்களில் இது சாதனை என குறிப்பிடப்பட்டுள்ளது.