மோட்டோ ஜி7 பவர் குறித்து இணையத்தில் கசிந்த தகவல்கள் இதோ!

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் வலைதளத்தில் லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களில் புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பிளே ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்கள் வெளியாகி இருந்தது.

இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் என்.எஃப்.சி. சப்போர்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மாடல் நம்பர் XT1955-1 பிரேசில் நாட்டிற்கும், XT1955-2 லத்தீன் அமெரிக்காவிற்கும், XT1955-4 மாடலில் என்.எஃப்.சி. வசதி வழங்கப்படவில்லை, XT1955-7 மாடலில் என்.எஃப்.சி. வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் ஓசன் என்ற குறியீட்டு பெயர் கொண்டிருப்பதாகவும், இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அட்ரினோ 506 ஜி.பி.யு. வழங்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் 2 ஜி.பி., 3 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. ரேம் ஆப்ஷன்களிலும், 32 ஜி.பி. மற்றும் 64 ஜி.பி. என இருவித மெமரி ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.