மோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ!

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வந்தது.

இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் உருவாவதை கூகுள் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9610 சிப்செட் மற்றும் 4 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டோரோலா ஒன் மற்றும் மோட்டோரோலா ஒன் பவர் போன்று புதிய ஒன் விஷன் ஸ்மார்ட்போனும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தை சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது.

இது உண்மையாகும் சமயத்தில் மோட்டோ ஸ்மார்ட்போனில் மென்பொருள் அப்டேட்கள் வேகமாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.