யாரும் எதுவும் பேசவில்லை..!!

புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து எந்தவொரு கட்சிகளும் இதுவரை தமது கட்சியுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமா என்பது குறித்து சம்பந்தனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலை வழங்கியதாக தெரியவருகிறது.

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வழங்கியுள்ள தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.