யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்! அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்.மண்கும்பான் பகுதியில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்கும்பான் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டில் ஹெரோயின்போதை பொருளை வைத்திருப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் நபரை கைது செய்து அவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து நான்கு சிறு பொதிகளில் அடைக்கப்பட்ட ஹெரோயின் போதை பொருளை மீட்டனர்.

மீட்கப்பட்ட போதை பொருள் 300 மில்லி கிராம் எனவும் , கைது செய்யப்பட்ட நபர் கைது செய்யப்படும் போது போதையில் இருந்துள்ளார்.

அவரிடம் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.