யாழில் கோர விபத்து (படங்கள்)

யாழ். பருத்தித்துறை வீதி அச்சுவேலி சந்திக்கு அருகாமையில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

பருத்தித்துறை நோக்கி வந்த கன்ரர் வாகனம் இறந்து கிடந்த நாயை விலத்துவதற்காக எதிர்கரைக்கு வாகனத்தை செலுத்தியபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதேவேளை இந்த விபத்தினால் வாகன சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மோட்டார் சைக்கிளில் சென்றவரே கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விபத்துச் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.