யாழில் திறக்கப்பட்ட 10 ரூபாய் உணவகம் !

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் முயற்சியினால் நுகர்வோரின் நலன்கருதி குறித்த சிற்றுாண்டி சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சங்கத் தலைவர் செ.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் சாவகச்சேரி நகரசபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் கலந்து கொண்டார்.