யாழில் நான்கு இளைஞர்கள் கைது ..!

யழ்.அரசடிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு மற்றும் பெற்றோல் குண்டு வீசிய சம்பவத்துடன் தொடர்புபட்ட 4 இளைஞர்கள் பொலிஸாரினால் அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை யாழ்.அரசடிப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது, 3 மோட்டார் சைக்கிளில் சென்ற 10 இளைஞர்கள் பெற்றோல் குண்டு வீசியதுடன், வர்த்தக நிலையத்தில் நின்ற இளைஞர்கள் மீது வாளால் வெட்டித் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதலின் பின்னர், அந்தப்பகுதி வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொளிகளை பெற்றுக்கொண்ட பொலிஸார் குறித்த இளைஞர்களை தேடுதல் நடாத்தி வந்திருந்தனர்.

அதேவேளை, கோப்பாய் மற்றும் அரியாலைப் பகுதிகளில் களவு மற்றும் வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட 14 இளைஞர்கள் கடந்த நாட்களில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கைதுசெய்யப்பட்டிருந்த கோப்பாய் மற்றும் அரியாலை, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களில் 4 இளைஞர்கள் அரசடிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு மற்றும் பெற்றோல் குண்டு வீச்சுடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றதுடன், குறித்த நால்வர் ஊடாக ஏனையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகின்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.