யாழ்ப்பாணத்தில் கார் ஒன்றினால் ஏற்பட்ட பதற்றம்! விரைந்து சென்ற பொலிஸார்

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக நீண்ட நேரமாக கார் ஒன்று தரித்து நின்றமையினால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக நீல நிறக் கார் ஒன்று காலையில் இருந்து தரித்து நின்றுள்ளது.

இதனை அவதானித்த பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த இடத்துக்கு வந்த பொலிஸார் கார் நின்ற இடத்திற்கு யாரையும் செல்லவிடாது தடுத்துள்ளனர்.

அதன் பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

பின்னர் நீண்ட நேரம் சென்று காரின் உரிமையாளர் வந்து காரை தரித்துவிட்டு சென்றமைக்கான காரணத்தைக் கூறியுள்ளனர்.

அதனையடுத்து அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார் அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுவிட்டு அனுப்பினர் .