யாழ் பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சியான செயல்!!

சாவச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிரசன்னா (40 வயது) என்ற உத்தியோகத்தர் பொலிஸ் நிலைய முன்பாக உள்ள வீதியில் கண்டெடுத்த சுமார் அறுபது ஆயிரம் ரூபாவினை நேர்மையாக பொலிஸ் நியைத்தில் ஒப்படைத்துள்ளார்.

குறித்த பணத்தினை தவறவிட்டவர்கள் உரிய ஆதாரத்தை காண்பித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரான பிரசன்னாவின் நேர்மையான செயற்பாட்டை நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சக பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாராட்டி வருகின்றனர்.

யாழருவி நிருபர் எஸ்.நிதர்ஷன்