யாழ். மேயராக இவரைத் தான் நியமிக்க வேண்டும்..???

யாழ். மாநகர சபையின் மேயராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறிலை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கூட்டமைப்பின் தலைமையிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யாழ்.மாநகர சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற வட்டார உறுப்பினர்கள் சிலர் இந்த கடிதத்தை கையளித்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

யாழ். மாநகர சபைக்கான மேயராக இ.ஆனோல்ட் நிறுத்தப்பட்டிருந்தார். எனினும் சொலமன் சிறிலுக்கு அப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் உலா வருகின்றன.

இதேவேளை, சொலமன் சிறிலை மேயராக்க வேண்டும் என்று கூறும் ஒரு தரப்பினர், யாழ் மாநகர சபையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து இரகசியப் பேச்சுக்களை நடாத்தினர் என்றும் கூறப்படுகிறது.