யூடியூப் அறிமுகப்படுத்தும் புதிய வசதிகள் இதோ!

யூடியூப் நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருவது என்பது அறிந்ததே.

இச் சேவையின் ஊடாக மேலும் சில வசதிகளை பயனர்களுக்கு வழங்க யூடியூப் முன்வந்துள்ளது.

சட் ரிப்ளை வசதி தான்னியக்க முறையிலான ஆங்கில கேப்ஷன் வசதி மொபைல் சாதனங்கள் ஊடான நேரடி ஒளிபரப்பின்போது இருப்பிடத்தினை டேக் செய்தல் உட்பட மேலும் சில வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த வசதிகள் பிரம்மண்டமான மியூசிக் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்தல் விளையாட்டுக்கள், விஞ்ஞான நிகழ்வுகள்,

கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கம்பியூட்டர் ஹேம் போன்றவற்றினை நேரடி ஒளிபரப்பு செய்யும் போது பெற்றுக்கொள்ள முடியும் என தெரவிக்கப்படுகிறது.

மேலும் நேரடி ஒளிபரப்பு முடிவடைந்த பின்னரும் இவ் வசதிகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

ஜ.ஒ.ஸ் மற்றும் ஆன்ராய்ட் ஆகிய இரு சாதனங்களிலும் மேற்குறித்த வசதிகள் கிடைக்கப்பெறும் என கூறப்பட்டுள்ளது.