ரஜினியின் ‘தர்பாரும்’ காப்பியா? சிக்கிய ஆதாரம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள ‘தர்பார்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று காலை வெளியானது.

இந்த ஃபர்ஸ்ட்லுக்கை கடந்த சில மணி நேரமாக ஆய்வு செய்த நெட்டிசன்கள் ஒருவழியாக இது எந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கின் காப்பி என்பதை கண்டுபிடித்துவிட்டனர்.

ஆம், அர்னால்ட் நடித்த ‘கில்லிங் கந்த்தார்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை போலவே ‘தர்பார்’ ஃபர்ஸ்ட்லுக்கும் இருப்பதாக கூறப்பட்டது.

தற்போது புகைப்பட ஆதாரத்துடன் கூடிய செய்திகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகி வருகிறது.