ரஜினியின் தர்பார் ஷூட்டிங்கில் நடந்த விபரீதம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான “தர்பார் ” படத்தில் நடித்துவருகிறார்.

இது ரஜினியின் கேரியரில் 166 வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்க்ஷன் தயாரிக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்பையிலுள்ள பிரபலமான கல்லூரி வளாகத்தில் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த கல்லூரி மாணவர்கள் படப்பிடிப்பை பார்க்க சென்றுள்ளனர் ஆனால் தர்பார் படக்குழுவினர் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் படக்குழுவினருக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் மாணவர்கள் கல்லூரியின் மாடிக்கு சென்று படப்பிடிப்பு தளத்தை நோக்கி கற்கள் வீசியதாக சொல்லப்படுக்கிறது.

எனவே இதுகுறித்து தர்பார் படக்குழு கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.